2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 21° ☀️ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

கொழும்பில் இந்தியாவின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம்.

உள்ளூர்August 15, 2025 · 1 year முன்0
கொழும்பில் இந்தியாவின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம்.

இந்தியாவின் 79வது சுதந்திர தினம் இன்று (15) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கொண்டாடப்பட்டது.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கொடியை ஏற்றி, இந்திய தேசிய இராணுவத்தின் தியாகங்களை நினைவுகூர்ந்து கொழும்பிலுள்ள IPKF நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில், ஜனாதிபதியின் சுதந்திர தின முன்னோடி உரையின் பகுதிகளை உயர்ஸ்தானிகர் வாசித்தார். சுவாமி விவேகானந்தர் கலாசார மையத்தின் மாணவர்கள் தேசபக்தி நிகழ்ச்சிகளை வழங்கினர். இலங்கை கடற்படை இசைக் குழுவினர் தேசபக்தி பாடல்களை இசைத்து நிகழ்வுக்கு பெருமை சேர்த்தனர்.

யாழ்ப்பாணம், கண்டி, ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாக்கள் நடைபெற்றன. “விக்சித் பாரத்” எனும் இலக்கை நோக்கிய அர்ப்பணிப்பை மீளவலியுறுத்தி, பெருமையுடன் இலங்கையிலுள்ள இந்தியப் புலம்பெயர் சமூகம் இந்நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.