2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கலா ஓயாவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது

உள்ளூர்November 29, 2025 · 11 months முன்3
கலா ஓயாவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

அந்த பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.

பேருந்தில் இருந்தவர்கள் அங்குள்ள வீடொன்றின் கூரையின் மீது தங்கியுள்ளனர்.

இந்த மக்களை மீட்கும் நடவடிக்கையை கடற்படை முன்னெடுத்திருந்தது.

நேற்று (28) இரவு நீரின் வேகம் காரணமாக அவர்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது.

கடற்படையின் செயற்பாட்டுக் கப்பல் தொகுதி, இலங்கை கடற்படை நீச்சல் பிரிவு, விசேட படகுப் படைப் பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மேலதிகப் படையினரும் இந்த மீட்புப் பணிகளில் இணைந்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கையின் நேரடிக் காட்சிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (29) அதிகாலை பார்வையிட்டுளார்