2026 September 13, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
22ஆவது திருத்தத்தை தோற்கடிக்க மக்கள் சக்தி திரட்டும் சஜித்!36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியின் பிடியில்!இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை 15 இலட்சத்தை கடந்தது!ஜாவா கடலில் மாயமான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது!ஜாவா கடலில் மீட்பு நடவடிக்கை தீவிரம்!கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்!புதிய பொது முகாமையாளர் நியமனம் கோரும் தொழிற்சங்கங்கள்!தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு விரிவாகும்!

கடலில் விழுந்தது விமானம் – இருவர் பலி

உலகம்October 20, 2025 · 11 months முன்2
கடலில் விழுந்தது விமானம் – இருவர் பலி

சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி சென்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விபத்து உள்ளூர் நேரப்படி இன்று (20.10.2025) அதிகாலை 3.50 மணிக்கு ஹாங்காங் (Hong Kong) சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான போயிங் 747-481, எமிரேட்ஸ் EK9788 விமானமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. 

துபாயிலிருந்து (Dubai) ஹாங்காங் சென்ற எமிரேட்ஸ் விமானம் ஓடுபாதையில் ஒரு வாகனம் மீது மோதி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் காரணமான இருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் இருவரும் தரையில் விமான நிலைய வாகனத்தில் இருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதை மூடப்பட்டுள்ளதுடன் தெற்கு மற்றும் மத்திய ஓடுபாதைகள் தொடர்ந்து இயங்கும் என்று ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்கள் மீட்கப்பட்டதாக சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.