குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராக முடியாது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச,தங்காலை போதைப்பொருள் கண்டுபிடிப்பு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பது தொடர்பாக தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் நேற்றைய தினம் ஆஜராக முடியாது என தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், வேறு ஒரு திகதியை வழங்குமாறு விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி அடுத்த ஞாயிற்றுக்கிழமை(12) தங்காலை குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.




