2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

தொடரும் தபால் – தொலைத்தொடர்பு ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு.

உள்ளூர்August 20, 2025 · 1 year முன்0
தொடரும் தபால் – தொலைத்தொடர்பு ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு.

நாட்டில் தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும் (20) தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

– தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்க தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவிக்கையில்,

அமைச்சருடன் முறையான கலந்துரையாடலை கோரி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வரவு நேர பதிவுக்காக கைரேகை இயந்திரம் நிராகரிக்கப்பட்டதாக வௌியான குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட பிரதி தபால்மா அதிபர் சமீஷா டி சில்வா, கைரேகை இயந்திரத்தை செயல்படுத்துவதே தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்புக்கான காரணம் என தெரிவித்தார்.