2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 21° ☀️ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

சட்டம் ஒன்றே ! – ஆனந்த விஜேபால.

உள்ளூர்August 28, 2025 · 1 year முன்1
சட்டம் ஒன்றே ! – ஆனந்த விஜேபால.

பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணி வரும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

– பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாதாள உலக கும்பல், அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் இயங்கு வருகின்றன, அரசியல்வாதிகள் தங்களது அரசியல் தேவைகளுக்காக பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புகளை பேணி வறுகின்றனர்.

பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணி வரும் அரசியல்வாதிகள் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளைபேணி வரும் அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன,

பாதாள உலக குழுவாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, பொலிஸாராக இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அனைவரும் சட்டத்திற்கு உட்பட்ட நாடாக மாற்றுவோம்.

அதிகாரத்தை பயன்படுத்தி சமூகத்தை வழிநடத்த நாங்கள் இடமளிக்க மாட்டோம்.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.