2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூல வரைவை சமர்பிக்க அனுமதி

உள்ளூர்September 9, 2025 · 11 months முன்0
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூல வரைவை சமர்பிக்க அனுமதி

2026ஆம் நிதியாண்டுக்கான வரைவு ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கடந்த ஜூலை முதலாம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2026ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூல வரைவுக்கு சட்டமா அதிபரின் ஒப்பதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.