2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் விபத்து !

உள்ளூர்October 31, 2025 · 10 months முன்2
முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப்  விபத்து !

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நேற்று (30) பொலிஸ் ஜீப் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்

ஐயன்கன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான ஜீப் வண்டி ஒன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு சென்று மீண்டும் திரும்பி முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது

திடீரென மாடுகள் குறுக்கே வந்தமையால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இருவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் இதேவேளை, ஜீப் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்