2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

#News Alert நாரஹேன்பிட குடியிருப்புத் தொகுதியில் தீ. #Video

BREAKINGஉள்ளூர்October 29, 2025 · 10 months முன்2
#News Alert நாரஹேன்பிட குடியிருப்புத் தொகுதியில் தீ. #Video

கொழும்பு – நாரஹேன்பிட, டபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 13 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேல் மாடிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ் தீ விபத்து காரணமாக வெளியேறும் வாயில்கள் தடைப்பட்டுள்ளதால் ‘ஸ்கைலிஃப்ட்’ (Skylift) வாகனங்கள் இரண்டும் அவ்விடத்திற்கு அனுப்பி மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்தினால் ஒரு வீடு முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அந்த வீட்டில் சிக்கியிருந்த இரண்டு பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.