2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

உள்ளூர்September 5, 2025 · 1 year முன்3
மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

குற்றவாளி ஒருவருக்கு வழக்கு விசாரணையின் பின்னர் நேற்றைய தினம் ஆயுள் தண்டனை வழங்கி மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மன்னார் பிரதேசத்தில் 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குறித்த வழக்கு நேற்றையதினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குற்றத்தின் பாரதூர தன்மையை கருத்தில் கொண்டு சந்தேகநபருக்கு எதிராக குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிரி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா, சட்டத்தரணி {ஹனைஸ் பாரூக் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி இருந்தார்.

வழக்கு தொடுனர் தரப்பில் வழக்கு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.