2026 October 24, Saturday ⛅ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்படும் இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம்

உள்ளூர்November 20, 2025 · 11 months முன்3
மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்படும் இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம்

இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குறித்த பாதுகாப்பு ஒப்பந்தம் முன்னரே சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், சிங்கள மொழியில் உள்ள ஆவணம் மட்டுமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

உரிய ஒப்பந்தம் (முழுமையாக) சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சபையில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், குறித்த ஒப்பந்தம் முன்னரே பாதுகாப்பு அமைச்சின் மீதான விவாதத்தின் போது சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதனை மீண்டும் இன்று (20) தான் சபையில் சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.