2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பாடசாலை மாணவர்களுக்கு விசேட அனுமதி

உள்ளூர்December 15, 2025 · 8 months முன்0

நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு மூலம் பாடசாலை செல்லும் மாணர்களுக்கு இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த மாத பயணச்சீட்டை சமர்ப்பித்து அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இதற்கிடையில், அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நிதியை திரட்டும் நோக்கில், ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்க ஆசிரியர்கள் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.