2026 October 25, Sunday ⛈️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

யாழ் கடற்கரைக்கு அருகே சிலை கரையொதுங்கியதாக தகவல்

உள்ளூர்November 18, 2025 · 11 months முன்2
யாழ் கடற்கரைக்கு அருகே சிலை கரையொதுங்கியதாக தகவல்

யாழ்ப்பாணம், வளலாய் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரையொதுங்கிய சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், இது வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் இட்ட சிலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்றனர். அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாகக் கடலில் விடப்படும் மூங்கிலிலான தொப்பங்கள் கடந்த காலங்களில் வடமராட்சிப் பகுதிகளில் கரையொதுங்கியுள்ளன.

அதேபோல், சேதமடைந்த இந்தச் சிலை கடலில் போடப்பட்ட நிலையில், அது வளலாய் பகுதியில் கரையொதுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த சிலை தற்போது வளலாய் கடற்றொழிலாளர் சங்கக் கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சிலை கரையொதுங்கியமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.