2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

அதிகூடிய வரி வருமானத்தை ஈட்டியது உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

உள்ளூர்November 20, 2025 · 9 months முன்2
அதிகூடிய வரி வருமானத்தை ஈட்டியது உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2,002,241 மில்லியன் ரூபாய் வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் மொத்த வரி வருமானம் 1,942,162 மில்லியன் ரூபாய் ஆகும்.

அதன்படி, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 60,079 மில்லியன் ரூபாய் வரி வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக கூடிய வரி வருமானத்தை ஈட்டியதால் அரச நிதி நிலையினை பலமாக முன்னெடுப்பதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதிகளவு பங்களிப்பை வழங்கியுள்ளது.

நாட்டின் சட்டங்களுக்கு அமைய வரி செலுத்தியர்களுக்கும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் நன்றி எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.