2026 October 23, Friday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

யாழில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது!

உள்ளூர்November 25, 2025 · 11 months முன்0
யாழில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் – அரியாலை மற்றும் நல்லூர் அரசடிப் பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபடுவதாக குருநகர் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் இருந்து 2.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, நல்லூர் அரசடிப் பகுதியில் 570 மில்லி கிராம் ஹெரோயினுடன் விற்பனையில் ஈடுபட்ட 24 வயதுடைய மற்றுமொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.