2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்து பாதிப்பு

உள்ளூர்November 28, 2025 · 9 months முன்2
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்து பாதிப்பு

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை பகுதிகளில் பல இடங்களில் பாரிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதன் விளைவாக இந்த முக்கியப் பிரதான வீதியில் வாகனப் போக்குவரத்து 28ஆம் திகதி அதிகாலை முதல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேசத்தில் பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக மண்மேடுகள், கற்கள், மரக்கிளைகள் உள்ளிட்டவை பிரதான வீதிக்கு சரிந்து விழுந்துள்ளன.

இதனால் வீதி முழுவதும் மண் மற்றும் கற்கள் குவிந்துள்ள நிலையில், போக்குவரத்தை சீராக செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மண்சரிவுகளை அகற்றும் பணிகள் அவசரகாலத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வந்தாலும், மழை மேலும் அதிகரித்து வருவதால் இந்தப் பணிகள் எதிர்பார்த்த அளவில் முன்னேற முடியாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் இணைந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர். மழை குறையும் வரை பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.