2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கம்பளை பிரதான வீதியில் மண்சரிவு

உள்ளூர்November 28, 2025 · 11 months முன்3
கம்பளை பிரதான வீதியில் மண்சரிவு

நாவலப்பிட்டி கம்பளை பிரதான வீதியில் உலப்பனை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.

சம்பவத்தையடுத்து, நாவலப்பிட்டி –கம்பளை பிரதான வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.

மண்சரிவில் காயமடைந்த ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சிலர் குடியிருப்புகளிலிருந்து காணாமல் போயுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்ட வண்ணம் இருப்பதால், அந்தப் பகுதியை நோக்கி பொதுமக்கள் நடமாட தவிர்க்குமாறு நாவலபிட்டிய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், நாவலபிட்டிய பிரதேசத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு அபாயங்களுக்கிடையில் சுமார் 30 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.