2026 October 26, Monday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஜி20 உச்சி மாநாடு நிறைவு விழாவில் அமெரிக்கா பங்கேற்ப்பு

உலகம்November 21, 2025 · 11 months முன்9
ஜி20 உச்சி மாநாடு நிறைவு விழாவில் அமெரிக்கா பங்கேற்ப்பு

ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் எதிர்வரும் 22, 23ஆம் ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதிபர் டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் அமெரிக்கா பங்கேற்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஜி20 மாநாடு அடுத்து ஆண்டு அமெரிக்காவில் நடக்க உள்ளதால் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக இந்த மாநாட்டில் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.