2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

டிஜிட்டல் மயமாகவுள்ள சுகாதார சேவை

உள்ளூர்November 10, 2025 · 9 months முன்1
டிஜிட்டல் மயமாகவுள்ள சுகாதார சேவை

நாட்டின் சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் விசேட குழுவொன்றை நிறுவுவது குறித்தான கலந்துரையாடல் சுகாதார அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் 10 வருடங்களுக்கென நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய சுகாதார கொள்கைக்கமைய டிஜிட்டல் பரிணாமத்திற்கு அதனை உடப்டுத்துவதற்கான இயலுமை குறித்தும் அவற்றை பின்பற்றக்கூடிய நீண்ட மற்றும் குறுகிய கால செயன்முறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

டிஜிட்டல் மயப்படுத்தலுக்கென வழிமுறைகள் அடங்கிய திட்டத்தை உருவாக்குதல், டிஜிட்டல் ஊடகம் வழியாக சுகாதார பாதுகாப்பு அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், அதற்கென சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் பிரதான வேலைத்திட்டங்களை பின்பற்றுதல் உள்ளிட்டவை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.