2026 October 26, Monday 🌧️ கொழும்பு 26° ⛈️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு.

உள்ளூர்October 7, 2025 · 1 year முன்4
மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு.

யாழ் – சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பணிப் புறக்கணிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் சட்டத்தரணிகளும் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

மாவட்ட நீதிமன்றம் மற்றும் மன்னார் நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) சட்டத்தரணிகள் சமூகமளிக்காது பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சம்பவம் எதிர் காலத்தில் இடம் பெறக் கூடாது என்பதை வலியுறுத்தி குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை சட்டத்தரணிகள் முன்னெடுத்துள்ளனர்.

இதனால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) மன்னாரில் நீதிமன்ற செயல்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு,இன்றைய நாளுக்கான வழக்கு விசாரணைகள் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது.