2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 21° ☀️ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

இன்று 10 மணி நேர நீர் வெட்டு !

உள்ளூர்October 23, 2025 · 11 months முன்3
இன்று 10 மணி நேர நீர் வெட்டு !

கொழும்பு 01 தொடக்கம் 15 வரை பல முக்கிய நகரங்களில் இன்று (23) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணி நேர நீர் வெட்டு அமுலாகும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை பெறும் பிரதான நீர் பம்பிக்கு வழக்கப்படும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடான நீர் விநியோகம் இவ்வாறு துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான பகுதிகளுக்கும், பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொடை, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.