2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
நாமலை சந்திக்க வெலிக்கடை சென்ற ஷிராந்தி!சத்யா நிகேதனில் கட்டிடம் சரிந்து பெரும் விபத்து!ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!

சூப்பர் ஸ்டாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

உலகம்August 16, 2025 · 1 year முன்2
சூப்பர் ஸ்டாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

– இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

– இதற்கு பதிலளித்துள்ள ரஜினிகாந்த்,

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் நீண்ட காலமாக மிகவும் மதிக்கும் ஒரு தலைவரிடமிருந்து அவற்றைப் பெறுவது மிகப்பெரிய மரியாதை. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஜெய் ஹிந்த் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.