2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

கிரிக்கெட் உலகின் அதிக கவனம் பெற்ற போட்டி இன்று

விளையாட்டுSeptember 14, 2025 · 11 months முன்0
கிரிக்கெட் உலகின் அதிக கவனம் பெற்ற போட்டி இன்று

2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

 குறித்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதுவரை இடம்பெற்றுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்களின் அடிப்படையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் 19 போட்டிகளில் மோதியுள்ளன. 

 இதில் இந்திய அணி 10 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன்,

3 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. அத்துடன் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட இராணுவ மோதலுக்குப் பின்னர், இரு நாடுகளும் விளையாடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

 இந்தநிலையில் குறித்த போட்டி இரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.