2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஈரானின் சமாதான முன்மொழிவு: அதிருப்தி வெளியிட்டார் ட்ரம்ப்!

உலகம்May 2, 2026 · 5 months முன்7
ஈரானின் சமாதான முன்மொழிவு: அதிருப்தி வெளியிட்டார்  ட்ரம்ப்!

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் முன்வைத்த சமீபத்திய பேச்சுவார்த்தை முன்மொழிவு குறித்து தான் திருப்தியடையவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஈரான் சில முன்னேற்றங்களைக் காட்டியுள்ள போதிலும், அவர்கள் ஒருபோதும் அந்த இலக்கை அடைவார்களா என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஈரான் அரசாங்கம் பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு புதிய முன்மொழிவுத் திட்டமொன்றை அனுப்பியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

எவ்வாறாயினும், அந்த முன்மொழிவுகள் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

பாகிஸ்தானில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நேரடிப் பேச்சுவார்த்தை குறித்துக் கருத்துத் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் மீதும் அதன் தலைவர்கள் மீதும் தான் மிகுந்த மதிப்புக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.