2026 October 27, Tuesday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கொஸ்கமையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது

உள்ளூர்February 13, 2026 · 9 months முன்5
கொஸ்கமையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலாவ பகுதியில் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பின்வருவன கைப்பற்றப்பட்டுள்ளன.

முதலாவது சந்தேகநபரிடமிருந்து 700 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 26,000 ரூபா பணம் மற்றும் 02 கைபேசிகள்.

இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து, 10 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்.

மூன்றாவது சந்தேகநபரிடமிருந்து ,10 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்.

கைது செய்யப்பட்டவர்கள் 23, 30 மற்றும் 32 வயதுடைய கொஸ்கம, புவக்பிட்டிய மற்றும் ஹன்வெல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.