2026 October 18, Sunday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்கி அதை விட கொடுமையான சட்டத்தினை கொண்டுவர முயற்சிக்கின்றனர்

உள்ளூர்February 18, 2026 · 8 months முன்4
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்கி அதை விட கொடுமையான சட்டத்தினை கொண்டுவர முயற்சிக்கின்றனர்

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவதாக கூறி அதை விட கொடுமையான அடக்குமுறையான சட்டத்தினை தேசிய மக்கள் சக்தியினர் கொண்டு வரவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

உலக நாடுகள், சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் அழுத்தங்கள் காரணமாக பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியிலும் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவோம் என உறுதி அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால் அதனை நீக்கி விட்டு அதனை விட மிக மோசமான கொடூரமான சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

பயங்கரவாத தடை சட்டத்தினால் அதிகமாக தமிழ் மக்களே தண்டனை அனுபவித்து வந்துள்ளனர்

போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மத தலைவர்கள் என கூறிக்கொண்டே போகலாம் இதனை ஓர் இனத்தின் மீது ஆயுதம் ஏந்தாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு வன்முறை ஆகும்.

அதனாலேயே உலக நாடுகள் , சர்வதேச அமைப்புக்கள் என்பன பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அவர்களின் அழுத்தத்தால் , பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு , அதனை விட கொடூரமான , மோசமான சட்டத்தினை கொண்டு வருவதனை ஏற்க முடியாது என மேலும் தெரிவித்தார்.