2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

எரிவாயுவிற்கு தட்டுப்பாடு இல்லை – லிட்ரோ

உள்ளூர்February 19, 2026 · 8 months முன்2
எரிவாயுவிற்கு தட்டுப்பாடு இல்லை – லிட்ரோ

வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதனால் எரிவாயுவை கொள்வனவு செய்யும் விடயத்தில் பீதியடைய தேவையில்லையென குறித்த நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 17 மற்றும் 18ம் திகதிகளில் ஏற்கனவே 284000 வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை விநியோகத்திலுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை மேலும் 351000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.