2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தேயிலை விவசாயிகளுக்கு 5,000 ரூபா மேலதிக மானியம்!

உள்ளூர்May 12, 2026 · 5 months முன்4
தேயிலை விவசாயிகளுக்கு 5,000 ரூபா மேலதிக மானியம்!


சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். 

இதற்காவே நிதி திறைசேரியினால் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டில் உரத் தட்டுப்பாடு எதுவும் இல்லை எனவும், எனினும் வருங்காலத்தில் உரத்தின் விலையில் சில அதிகரிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கருத்துத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, 

”தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் உரத்தின் விலை உயர்ந்துள்ளது. கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நாம் இறக்குமதி செய்யும் உரத்தின் விலையில் உயர்வு ஏற்படும். உர விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும், ஆனால் விலை உயர்வு இருக்கும். இந்த விலை அதிகரிப்பால் விவசாயிகளுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க, நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 5,000 ரூபா மானியம் வழங்கினோம். போர்ச் சூழல் காரணமாக இது மேலதிகமாக வழங்கப்பட்டது. இது 2 ஹெக்டேயர் வரை வழங்கப்படும், அதாவது 10,000 ரூபா கிடைக்கும். அதேபோல், போர்ச் சூழல் காரணமாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் 5,000 ரூபா மேலதிக மானியம் வழங்கத் தீர்மானித்துள்ளோம். அதன்படி உரத் தட்டுப்பாடு ஏற்படாது. விலை உயரக்கூடும், அவ்வாறு விலை உயரும்போது விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய இழப்பைக் குறைக்க அரசு இவ்வாறு மானியத்தை அதிகரித்து வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.