2026 November 1, Sunday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° 🌫️ கண்டி 20° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதல்ல

உள்ளூர்January 30, 2026 · 9 months முன்1
பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதல்ல

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். 

பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம். 

இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தௌிவுப்படுத்திய நிலையில், அது குறித்து ஆராய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 

அந்த குழுவுக்கு தேவையான அளவு எமது யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம். இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். 

அதேநேரம் பொலிஸ் துறையில் 32000 பொலிஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. 

இந்த வருடத்தில் 2500 பேரும், அடுத்த வருடத்தில் 2700 பேரும் ஓய்வு பெறவுள்ளனர். எனவே அவர்களை யாரும் தடுக்க முடியாது. 

இந்நிலையில் பொலிஸ் துறையில் புதிதாக 10000 பேரை சேவையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.