2026 September 27, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ☀️ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர SJB தீர்மானம்.அதிக மழையால் வெள்ள அபாயம் உருவாகலாம் என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை.தொடை தசைப்பிடிப்பு காரணமாக பட்லர் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார்.22 மில்லியன் மக்களின் உரிமை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சஜித் குற்றச்சாட்டு.2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.தொழில்நுட்ப கோளாறா? கொங்கோ விமான விபத்து குறித்து விசாரணை!சம்மாந்துறை நீதிமன்றத்தில் ரூ.31 இலட்சத்திற்கும் அதிகமான டொலர் பணம் மாயம்!பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்.

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

உள்ளூர்September 26, 2026 · 15 hours முன்6
2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள அறிக்கையில், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk பகுதிக்குச் சென்று, பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார். 

இப்பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் இருப்பின், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் ‘1911’ என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம். 

மேலும், 0112-784208, 0112-784537 மற்றும் 0112-785922 ஆகிய இலக்கங்களுக்கும் தொடர்புகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, இந்த ஆண்டின் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.