2026 September 6, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

மக்களின் இறையாண்மை மீறப்படுவதாக மனுதாரர்கள் குற்றச்சாட்டு!

உள்ளூர்September 3, 2026 · 3 days முன்5
மக்களின் இறையாண்மை மீறப்படுவதாக மனுதாரர்கள் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது. 

இந்த மனுக்கள் இன்று (03) ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரை உள்ளடக்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 

குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரால் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

உத்தேச சட்ட மூலத்தில் அடங்கியுள்ள ஏற்பாடுகள் ஊடாக, அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் இறையாண்மை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். 

அத்துடன், இந்தச் சட்ட மூலத்தின் ஊடாக தகவல் அறியும் உரிமையும் மட்டுப்படுத்தப்படுவதாக அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டுமானால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அது அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.