2026 September 29, Tuesday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.மத்திய மாகாண லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்.நிதி மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கிரிஷ் வழக்கு விசாரணை.இலங்கை சார்பில் தேசிய உரையாற்றவுள்ளார் வெளிவிவகார அமைச்சர்.யோஷித ராஜபக்ஷ தொடர்பான நிதித்தூய்தாக்கல் வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு.செப்டம்பர் 28 நடைபெறவிருந்த மஹாபொல விழா புதிய திகதி அறிவிக்கப்படும் வரை ஒத்திவைப்பு.மத்திய கிழக்கு பதற்றத்தால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு.ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் இந்த ஆண்டிற்குள் வழங்கப்படும்.

வானிலை முன்னறிவிப்பு

உள்ளூர்May 8, 2026 · 5 months முன்7
வானிலை முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

இன்று (08) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். 

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.