2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்: முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

உலகம்May 12, 2026 · 3 months முன்2
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்: முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

 

இந்தச் சம்பவத்தை அடுத்து மீனவர் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் கவலையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

 

சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 6 மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக ரீதியிலான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.