2026 October 11, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அதிக மழையால் குக்குலே கங்கை வான் கதவு திறக்கப்பட்டது!

உள்ளூர்August 26, 2026 · 2 months முன்10
அதிக மழையால் குக்குலே கங்கை வான் கதவு திறக்கப்பட்டது!

தற்போது நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 84,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

7 மாவட்டங்களைச் சேர்ந்த 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 நபர்கள் இந்த வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, 5 மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 24,144 குடும்பங்களைச் சேர்ந்த 75,734 நபர்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

இதனிடையே, நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என கடமையிலுள்ள வானிலை அதிகாரி மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இதேவேளை, குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக அந்த நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக வினாடிக்கு 20 கனமீட்டர் நீர் குடா கங்கைக்கு திறந்து விடப்படுவதாக குக்குலே கங்கை நீர்மின் உற்பத்தி நிலைய நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.