2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அலங்காரத் தேரில் எழுந்தருளி அருள்பாலித்த மாமாங்கேஸ்வரர்!

உள்ளூர்August 11, 2026 · 2 months முன்9
அலங்காரத் தேரில் எழுந்தருளி அருள்பாலித்த மாமாங்கேஸ்வரர்!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் திருவிழா, இன்று (11) காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

 ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் நடைபெற்றது. 

 அதனைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்திற்கு மத்தியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி மாமாங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.

 மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் ஒருங்கே கொண்ட இவ்வாலயத்தின் மகோற்சவமானது கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.