2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

3 கிராமங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நீக்கப்பட்டது!

உள்ளூர்August 2, 2026 · 2 weeks முன்1

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. 

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று (1)பிறப்பிக்கப்பட்டது. 

இதற்கமைய, 246/கெந்தலியத்த பாலுவ – மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ – வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.