2026 September 25, Friday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி சினாரி லக்மந்தி ஹெட்டியாராச்சி கைது.டிசம்பரில் இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலிய மகளிர் அணி மூன்று ODI போட்டிகளில் களமிறங்குகிறது.புத்தக VAT வரி மாற்றம் குறித்து சாதகமான நம்பிக்கை கொள்ளலாம் – ஹரிணி அமரசூரிய.நடைமுறைகளை மீறி ஊழியர்களை நியமித்ததாக உதேனி தசநாயக்க மீது குற்றச்சாட்டு.வங்கிக் கணக்கு தொடங்கவும் TIN அவசியம்.தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் சீனாவுடன் பேணிய இராஜதந்திர உறவுகளை மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார்.இலங்கை–இந்திய உறவுகளை முன்னிறுத்திய ரணில்–சந்தோஷ் ஜா சந்திப்புஇலங்கையின் தொழிற்கல்வித் துறைக்கு UAE முதலீட்டு ஆர்வம்

டிசம்பரில் இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலிய மகளிர் அணி மூன்று ODI போட்டிகளில் களமிறங்குகிறது.

உள்ளூர்September 25, 2026 · 2 hours முன்1
டிசம்பரில் இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலிய மகளிர் அணி மூன்று ODI போட்டிகளில் களமிறங்குகிறது.

அவுஸ்திரேலிய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி, எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. 

இதன்போது இரண்டு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடர் நடைபெறவுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

ரன்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் டிசம்பர் 15, 18 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்த மூன்று போட்டிகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மூன்று ஒருநாள் போட்டிகளும் 2025–2029 ICC மகளிர் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இடம்பெறவுள்ளது. 

குறித்த தொடருக்காக அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.