2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

59வது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் தொடக்கம்!

உள்ளூர்April 9, 2026 · 6 months முன்5
59வது தேசிய புத்தரிசி விழா  ஜனாதிபதி தலைமையில் தொடக்கம்!

59 ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

 மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த மாபெரும் கலாசார விழாவின் போது, விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை புத்தபெருமானுக்கு அர்ப்பணித்தனர். 

 இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எமது கலாசாரத்தின் பெரும் பகுதியாக விவசாயம் பின்னிப்பிணைந்துள்ளதாகத் தெரிவித்தார். 

 புத்தரிசி விழா அதன் உச்சகட்ட பலனாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் அடையாளமும் கலாசாரமும் இதன் மூலம் பிரதிபலிக்கின்றது என்றும் கூறினார். 

 கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதே தமது நோக்கம் எனவும், அதற்காக வலுவான தொலைநோக்குப் பார்வையும் வேலைத்திட்டமும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். 

 அத்துடன், விவசாயிகளின் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்காகத் தெளிவான உறுதிப்பத்திரங்களை   வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.