2026 October 16, Friday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பயாகல சம்பவம் – சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் சிக்கியது!

உள்ளூர்September 1, 2026 · 2 months முன்10
பயாகல சம்பவம் – சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் சிக்கியது!

பயாகல, கொஸ்ஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், இன்று (01) காலை தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலதூவ பகுதியிலுள்ள இறப்பர் தோட்டமொன்றில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (31) இரவு பயாகல பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பாதாள உலகக் குழு உறுப்பினரான “பானந்துரே நிலங்க” என்பவரின் மைத்துனரான “டிலா” என அழைக்கப்படுபவர் ஆவார்.