2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 31° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!

22ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள் விசாரணைக்கு!

உள்ளூர்August 31, 2026 · 7 days முன்8
22ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள் விசாரணைக்கு!

ஆளும் கட்சியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைப் பரிசீலிப்பதற்காக நாளை (01) அழைக்குமாறு உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

இம்மனுக்களை விசாரணை செய்வதற்காகப் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவினால் ஐந்து பேரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமொன்றும் பெயரிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, குறித்த நீதியரசர்கள் குழாமின் தலைவராகப் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன செயற்படுவார். 

அசல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் இந்த நீதியரசர்கள் குழாத்தின் ஏனைய உறுப்பினர்களாவர்.