2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!நாமலை சந்திக்க வெலிக்கடை சென்ற ஷிராந்தி!சத்யா நிகேதனில் கட்டிடம் சரிந்து பெரும் விபத்து!ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!

நாமலை சந்திக்க வெலிக்கடை சென்ற ஷிராந்தி!

உள்ளூர்September 7, 2026 · 1 hour முன்4
நாமலை சந்திக்க வெலிக்கடை சென்ற ஷிராந்தி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். 

நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிப்பதற்காக அவர் இவ்வாறு அங்கு சென்றுள்ளார். 

அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் சற்றுமுன்னர் சிறைச்சாலை வளாகத்திற்குள் சென்றுள்ளார். 

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான வழக்கின் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 

இதனையடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.