2026 September 7, Monday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
கொழும்பு–ஜகார்த்தா ஸ்ரீலங்கன் விமானங்கள் இரத்து!58 வயதான ‘வாசனா’ யானைக்கு இனி முக்கிய பெரஹெராக்கள் மட்டும்!கடும் வெப்பம்; யால வனம் தற்காலிகமாக மூடல்!அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!நாமலை சந்திக்க வெலிக்கடை சென்ற ஷிராந்தி!சத்யா நிகேதனில் கட்டிடம் சரிந்து பெரும் விபத்து!ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!

58 வயதான ‘வாசனா’ யானைக்கு இனி முக்கிய பெரஹெராக்கள் மட்டும்!

உள்ளூர்September 7, 2026 · 55 minutes முன்5
58 வயதான ‘வாசனா’ யானைக்கு இனி முக்கிய பெரஹெராக்கள் மட்டும்!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான ‘வாசனா’ யானையை, ஒரு சில பிரதான பெரஹெரா நிகழ்வுகளை தவிர, வேறு ஊர்வலங்களில் பங்கேற்க செய்யாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

யானையின் உடல் ஆரோக்கியம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறிய பெரஹெரா நிகழ்வுகளிலும் வாசனா யானை ஈடுபடுத்தப்பட்டிருந்தது. 

அத்துடன் தற்போது அந்த யானைக்காக பல்வேறு இடங்களில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. 

எவ்வாறாயினும் 58 வயதாகும் வாசனா யானையை பல்வேறு இடங்களுக்கு நீண்ட தூரம் வாகனங்களில் கொண்டு செல்லப்படுவதால் யானைக்கு பெரும் சோர்வும் அசௌகரியமும் ஏற்படுவதாகவும் பஸ்நாயக்க நிலமே சுட்டிக்காட்டுகிறார். 

எனவே, யானையின் சுகாதார நிலைக்கு முன்னுரிமை அளித்து இனிவரும் காலங்களில் ஒருசில பிரதான வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களின் பெரஹெரா நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்க செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெரிவித்துள்ளார்.