2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு.

உள்ளூர்January 2, 2026 · 8 months முன்2
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள வர்த்தக கடைத்தொகுதிக்கு முன்பாகவே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 21வயதுடைய முகுந்தன் சந்தோஸ் என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வந்திறங்கி அக்கரைப்பற்றுக்கு செல்ல இருந்தவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று இரவு 11.00மணி வரையில் தங்களுடன் தொடர்பில் இருந்தர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த உயிரிழந்தவரின் தந்தையார் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் மட்டக்களப்பு தடவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.