2026 October 26, Monday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

41ஆவது உலக திருமணமான அழகி போட்டி : சபீனா யூசுப் பங்கேற்பு

உள்ளூர்January 21, 2026 · 9 months முன்3
41ஆவது உலக திருமணமான அழகி போட்டி : சபீனா யூசுப் பங்கேற்பு

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவுள்ள 41ஆவது உலக திருமணமான அழகி (Mrs. World) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றுவதற்காக சபீனா யூசுப் (Sabina Yusuff) அவர்கள் இன்று (2026 ஜனவரி 21) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

60க்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடர், ஜனவரி 22 முதல் 29 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெறவுள்ளது.

அவர் இன்று அதிகாலை 03:00 மணிக்கு கத்தார் ஏர்வேஸின் QR-659 விமானம் மூலம் தோஹா சென்றடைந்து, அங்கிருந்து மற்றுமொரு விமானம் மூலம் லாஸ் வேகாஸ் செல்லவுள்ளார்.

அவரை வழிஅனுப்பி வைப்பதற்காக தேசிய பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க, பயிற்சியாளர்கள் ருக்மால் சேனநாயக்க மற்றும் தாரக குருகந்த ஆகியோருடன், 2024ஆம் ஆண்டு உலக திருமணமான அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இஷாதி அமண்டா உள்ளிட்ட உறவினர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.