2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கையின் தேசிய தேயிலை விற்பனை விலை வீழ்ச்சி !

உள்ளூர்April 9, 2026 · 6 months முன்4
இலங்கையின் தேசிய தேயிலை விற்பனை விலை வீழ்ச்சி !

இலங்கையின் தேசிய தேயிலை விற்பனை சராசரி விலையானது கடந்த மார்ச் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக போர்ப்ஸ் மற்றும் வோக்கர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2026 மார்ச் மாதத்தில் ஒரு கிலோகிராம் தேயிலையின் சராசரி விலை 1,144.23 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது பெப்ரவரி மாத விலையான 1,152.11 ரூபாவுடன் ஒப்பிடுகையில் 7.88 ரூபா சரிவாகும்.

இதேவேளை, 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை 39.53 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான தேசிய சராசரி விலை 1,153.25 ரூபாவாகும். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 26.07 ரூபா குறைவானது.

மேலும், பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 8.31 ரூபா வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதன் விலை 5.72 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

மாதாந்த அடிப்படையில் 5.72 ரூபா உயர்வைக் காட்டினாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 69.21 ரூபா எனும் பாரிய விலைச் சரிவைச் சந்தித்துள்ளது.