2026 August 27, Thursday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நேபாளத்திற்கு உதவ இலங்கை தயார் – ஜனாதிபதிவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குட்டெரெஸ் இரங்கல்!திபெத்திலும் பலர் உயிரிழப்பு – 265 பேர் காணாமல் போனதாக தகவல்!பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!அதிக மழையால் குக்குலே கங்கை வான் கதவு திறக்கப்பட்டது!யாழ் மாவட்ட செயலக சம்பவம் – சுமந்திரன் கடும் கண்டனம்!காணமல் ஆக்கப்பட்ட பிரச்சனை வடக்குக்கு மட்டும் அல்ல.. செம்மணியின் உண்மையை கண்டறிவோம்.. யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார! அதிவேக நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

நேபாளத்திற்கு உதவ இலங்கை தயார் – ஜனாதிபதி

உள்ளூர்August 27, 2026 · 21 seconds முன்0
நேபாளத்திற்கு உதவ இலங்கை தயார் – ஜனாதிபதி

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிகழ்ந்த துயரமான உயிரிழப்புகளை அறிந்து தாம் ஆழ்ந்த வேதனையடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெறும் 10 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு மோசமான புயலில் இருந்து இன்னும் மீண்டு வரும் ஒரு நாடு என்ற வகையில், நேபாள மக்களின் துயரத்தில் இலங்கையும் பங்குகொள்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

அரசாங்கம் மற்றும் நேபாள மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் அனைத்து இலங்கை மக்களும் ஒன்றிணைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.