2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்!

உள்ளூர்January 29, 2026 · 7 months முன்2
கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்!

கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெராவை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01ஆம் திகதிகளில் கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனவரி 31 (சனிக்கிழமை) மற்றும் பெப்ரவரி 01 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்களிலும் மாலை 06:30 மணி முதல் பெரஹெரா நிறைவடையும் வரை இந்தப் போக்குவரத்து ஒழுங்குகள் அமுலில் இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரஹெரா காலப்பகுதியில் பொதுமக்களுக்கும் சாரதிகளுக்கும் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கும் பொருட்டு இந்த விசேட வீதி ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.