2026 October 16, Friday ⛅ கொழும்பு 24° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஓரளவு கனமழை பெய்யும்

உள்ளூர்April 2, 2026 · 7 months முன்3
ஓரளவு கனமழை பெய்யும்

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும் மேற்கு, மத்திய, சபரகமுவ, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் தென் மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் காலையில் மழை பெய்யக்கூடும்.