2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

இன்றைய வானிலை

உள்ளூர்December 22, 2025 · 8 months முன்2

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடமேல் மாகாணம் மற்றும் அம்பாறை, அம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில், காலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.