2026 October 23, Friday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

புதிய 07 ஆலோசனைக் குழுக்கள் – அமைச்சரவை தீர்மானம்

உள்ளூர்December 23, 2025 · 10 months முன்1
புதிய 07 ஆலோசனைக் குழுக்கள் – அமைச்சரவை தீர்மானம்

உள்ளூர் உற்பத்தித் துறைகளை வலுப்படுத்தி மேம்படுத்தும் நோக்கில் ஆலோசனைக் குழுக்களை அமைப்பதற்காக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி செயல்பாடுகளில் உருவாகும் கொள்கை ரீதியான சிக்கல்களை குறைக்கும் நோக்குடன், உற்பத்தித் துறைகளை உள்ளடக்கிய வகையில் ஏற்கனவே 20 ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், இக்குழுக்களின் வரம்பில் சேர்க்கப்படாத மேலும் 07 விசேட கைத்தொழில் துறைகளுக்கு ஆலோசனைக் குழுக்கள் அமைக்க வேண்டிய தேவை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச நிறுவனங்கள், வர்த்தக சபைகள் அல்லது சம்மேளனங்கள், கல்விசார் நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் நிபுணர்கள் ஆகியோரைக் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆலோசனைக் குழுவும் 25 பேருக்கு அதிகமாக இல்லாத உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட உள்ளது.